×

எம்பி கதிர் ஆனந்துக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை

புதுடெல்லி: கடந்த 2012-13ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை 2013ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டிய நிலையில் 2015ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி தாக்கல் செய்ததுடன், 2016ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிய பின், ஒரு கோடியை நான்கு லட்சத்து 94 ஆயிரத்து 60 ரூபாய் வருமான வரியை செலுத்தியுள்ளதாக கூறி எம்.பி கதிர் ஆனந்துக்கு எதிராக வேலூர் நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணைக்கு தடைக்கோரி கதிர் ஆனந்த் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எம்பி கதிர் ஆனந்த் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஹெச்.ராய் மற்றும் பங்கஜ் மிட்டல் ஆகியோர் வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

The post எம்பி கதிர் ஆனந்துக்கு எதிரான வருமான வரித்துறை வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தடை appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Income Tax Department ,Kathir Anand ,New Delhi ,Dinakaran ,
× RELATED நிதி மோசடியை விசாரிக்க வருமான...